எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

முறைமை வினாக்கள்

01) எல்லா வினாக்களுக்கும் விடை தருக.
  1. முறைமை என்றால் என்ன?
  2. முறைமை ஒன்றை உருவாக்க வேண்டின் செயற்படுத்த வேண்டிய படிநிலைகளை ஒழுங்காகத் தருக.
  3. முறைமை ஒன்றின் பிரதான அம்சங்கள் எவை?
  4. முறைமை ஒன்றைக் குறிப்பிட்டு அதன் உபமுறைமைக்கான உதாரணம் ஒன்றையும் தருக.
  5. முறைமை ஒன்றின் உருவாக்கம் தேவை என்பதற்கான ஒரு காரணம் குறிப்பிடுக.
  6. தகவல் தொடர்பாடல் முறைமைக்கு உதாரணம் ஒன்று தருக.

  7. கணனித் தகவல் தொடர்பாடல் முறைமைக்கு உதாரணம் ஒன்று தருக.
  8. முறைமை ஒன்றை உருவாக்குவதற்கு பின்பற்றவேண்டிய படிமுறைகளை ஒழுங்காகத் தருக.

02) முறைமை வட்டம் ஒன்றின் முதல் அம்சம் பிரச்சினைகளை 
      விளங்கிக்கொள்ளுதலாகும்.

  1. பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளுதல் எனும் நிலையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் 2 தருக.
  2. பிரச்சினையை விளங்கிக் கொள்ளுதல் எனும் நிலைக்கு அடுத்ததாக சாத்தியவள ஆய்வு அமையும். இந்த நிலையிலால் கிட்டும் அனுகூலம் 2 தருக.
  3. முறைமைப் பகுப்பாய்வில் புதிய முறைமையை உருவாக்குவதற்குரிய பல விபரங்கள் பெறப்படுகின்றன. இவை பல்வேறு வழிகளில் பெறப்படுகின்றன. அவ்வாறு தகவல் பெறப்படத்தக்க வழிகள் 4 ஐ தருக.
  4. முறைமைப் பகுப்பாய்வில் கலந்தாலோசிக்கப்படும் முக்கிய கருத்துக்கள் 3 தருக.
  5. முறைமை வட்டத்தில் அடுத்த கட்டம் முறைமை வடிவமைப்பாகும். இவ்வடிவமைப்பு இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். அவ்விருகட்டங்களும் எவை?
  6. அதில் எக்கட்டத்தில் கணனியுடனான வேலைகள் நடைபெறுகின்றன?