பணிச் செயன்முறை (OS)
- கணனி ஒன்றுக்கு உயிர் கொடுப்பது போன்ற வேலையைச் செய்வது பணிச் செயன் முறை மென்பொருளாகும்.
- இது பொதுவாக OS என அழைக்கப்படும்.
- பல நிறுவனங்கள் PC வகைக்குரிய OS களை உருவாக்கியுள்ளன.
- OS ஆனது கணனியின் வன்பொருட் பகுதிகளை இணைத்து அவற்றை ஒரு ஒழங்குமுறைக்கேற்ப செயற்பட வைக்கின்றது.
- OS இல்லாவிடின் கணனியால் பயன்இல்லை.
- கணனியில் OS முதலில் நிறுவப்பட வேண்டும்.
- கணனியின் வன்பொருளையும், மென்பொருளையும் முகாமை செய்து பயனர்களுக்கு வேலை செய்வதற்கேற்ற இடைமுகத்தை வழங்குதல் OS இன் செயற்பாடாகும்.
- பல்வேறு OS கள் பாவனையில் உள்ளன :-
- Windows
- Mic
- Linux
- Ubuntu
- OS இன் செயற்பாட்டை விபரிப்பதற்குரிய வரிப்படம்
- இவ் வரிப்படத்தின் அடிப்படையில் வன்பொருளுக்கு ஆதாரம் OS ஆகும் என்பது தெரிகின்றது.
- OS மூலம் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளை 4 வகைக்குள் அடக்கலாம்.
- நினைவக முகாமை
- முறைவழி முகாமை
- துணைக்கருவி முகாமை
- கோப்பு முகாமை
நினைவக முகாமை
- கணனியின் நிணைவகத்தை முகாமை செய்வது, OS ஒரு பணியாகும்.
- ஒரே தடவையில் பல பணிகள் செயற்படும் போது அவற்றிக்கிடையில் மோதல் ஏற்படாதவாறு அதை நிர்வகிப்பது OS ஆகும்.
- குறித்த பணி முடிவடைந்ததும் நினைத்தில் அப்பணிக்காக ஒதுக்கிய இடத்தை விடுவித்து அடுத்த பணிக்கு நினைவகத்தை OS தயார் செய்யும்.
- அதிக பயனுனர்கள் கணனியைப் பயன்படுத்தும் போது அச்சந்தர்ப்பத்தில் நினைவகத்தை அனைவருக்கும் ஏற்றவாறு முகாமை செய்வது OS ஆகும்.
முறைவழி முகாமை
- முறைவழி என்பது Processing ஆகும்.
- உள்ளீடு செய்யப்படும் தரவுகளை தகவல்களாக மாற்றுதல் முறைவழி முகாமை என்பதனுள் அடங்கும்.
- உள்ளீட்டுக் காலத்திற்கேற்ப Processing நேரத்தை முகைமைசெய்வது முறைவழி முகாமை ஆகும்.
துணையுறுப்பு முகாமை
- கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள துணையுறுப்புக்களை நிர்வகித்து அவற்றை உரியவாறு செயற்பட வைப்பது துணையுறுப்பு முகாமையாகும்.
- துணையுறுப்புக்கள் செயற்படும் கதி, தகவல்களின் அளவு, அவற்றின் நோக்கம், தகவல்கள் பாயும் திசை, போன்ற விடயங்கள் துணையுறுப்பு முகைமை என்பதனுள் அடங்கும்.
கோப்பு முகாமை
- கோப்பு முகாமை என்பது File களை முகாமை செய்வதைக் குறிக்கும்.
- File களை உருவாக்குதல் Edit செய்தல் அழித்தல் அசைத்தல் நகல் எடுத்தல் போன்ற பணிகளை கோப்பு முகாமை எனும் செயற்பாட்டின் மூலம் OS நிறைவேற்றுகின்றது.
- கோப்பு முகாமை நன்றாக அமையாவிடின் கணனியின் பயன் சரிவரக் கிடைப்பதில்லை எனவே OS அக்குறையை இல்லாமல் செய்யும் பொருட்டுச் செயற்படுகின்றது.
OS இன் அனுகூலங்கள்
- பயன்படுனர்களுக்குரிய இடைமுகத்தை வழங்குகின்றது.
- வன்பொருளையும் மென்பொருளையும் இணைத்து ஒழுங்குபடுத்தி செயற்படவைக்கின்றது.
- Coding தொடர்பான அறிவு இல்லாமலே கணனியைப் பயன்படுத்த உதவுகின்றது.