எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

Thursday, June 3, 2010

கணனி வன்பொருட்கள்

  • குறித்த கட்டளையின் படிசெயற்படத்தக்கதும், தரவுகளை தவல்களாக மாற்றக்கூடியதும் சேமிப்புத்திறனுடையதும் பின்னர் அவற்றை மீளவழங்கக்கூடியதுமான இலத்திரனியல் சாதனம் கணனியகும்.
  • கணனி வன்பொருள், மென்பொருள், உயிர்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு ஆகும் .
  • அதில் வன்பொருள் என்பது கணனியின் தொட்டு உணரக்கூடிய பகுதியாகும்.
  • கணனியின் மூலம் ஆற்றப்படும் பிரதான செயற்பாடுகள்
  1. உள்ளீடு
  2. முறைவழியாக்கம்
  3. வெளியீடு
  4. தகவல்களைத் தேக்கிவைத்தல்
  5. கட்டுப்படுத்தல்
  • இச்செயற்பாடுகளைச் செய்யத்தக்க வகையில் கணனி வன்பொருட்கள் ஒழுங்கமைந்துள்ளன.
  • அவ் வன்பொருட்கள் பின்வருமாறு பிரித்து நோக்கப்படும்.
  1. உள்ளீட்டுக் கருவிகள்.
  2. வெளியீட்டுக் கருவிகள்.
  3. தேக்கச் சாதனங்கள்.
  4. முறைவழியாக்கும் சாதனம்
  • உள்ளீட்டுச் சாதனங்கள் கணனிக்குள் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் உள்ளீடு செய்வதற்குப் பயன்படும் கருவிகளகளாகும்.
  • உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி, நுணுக்குப்பன்னி, இறுவட்டு, வருடி, கமரா, பட்டைக் குறிமுறை
  • வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும்.
  • உதாரணமாக :- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி, வன்தட்டு
  • மையவழி அலகு 3 பிரதான பகுதிகளைக் கொண்டது
  1. கட்டுப்பாட்டு அலகு
  2. எண்கணித, தர்க்கிக்கும் அலகு,
  3. நினைவகம்
  • கட்டுப்பாட்டு அலகு
  • கணினியின் எல்லாக் கட்டுப்பாட்டுப் பணிகளும் இவ்வலகின் மூலம்மேற்கொள்ளப்படுகின்றன. 
  • தேவையான சந்தர்ப்பங்களில் அவசியமான விதத்தில்கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு கணினியின் எல்லாப் பகுதிகளையும் கட்டுப்படுத்தல்இவ்வலகின் மூலம் செய்யப்படுகின்றது.

  • எண்க்கணித, தருக்க்க அலகு
  • எல்லா விதத்திலும் அமைந்த எண்கணிதப் பணிகளும் தருக்கப் பணிகளும் இவ்வலகின் மூலம் செய்யப்படுகின்றன.

  • நினைவகம்
  • கணிப்புகளுக்காக அல்லது தயார்செய்வதற்காக மைய முறைவழி அலகிற்கு அனுப்பத் தயார் செய்யப்பட்டுள்ள தரவுகளையும் மைய முறைவழி அலகிலிருந்து புறத்தே வழங்கப்படும் தகவல்களையும் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு நினைவகம் பயன்படும்.
  • கணினியில் முதன்மை நினைவகம் இரு விதங்களில் இருப்பதைக் காணலாம்.
  1. தற்போக்கு அணுகு நினைவகம் RAM
  2. வாசிப்பு மட்டும் நினைவகம் ROM
  • தற்போக்கு அணுகு நினைவகம்
  • தற்காலிக நினைவகமாகிய தற்போக்கு அணுகு நினைவகத்தில் உள் ள தரவுகள் கணினியை நிறுத்தும்போதும் அதில் உள்ள மின்வலுவைத் தொடுப்பகற்றும்போதும் அழிந்து போகும்.
  •  தற்போக்கு அணுகு நினைவகத்திற்குத் தேவையானவாறு தரவுகளைச் சேர்க்கத்தக்கதாக அதில் உள்ள தரவுகளை மாற்றலாம் அல்லது அழித்து விடலாம். 
  • தற்போக்கு அணுகு நினைவகம் பின்வருமாறு இருவகைப்படும்.
  1.  மாறாநிலைத் தற்போக்கு அணுகுநினைவகம்(Static Random Access Memory)(SRAM)
  2. இயங்குநிலைத் தற்போக்கு அணுகு நினைவகம் (Dynamic Random Access Memory) (DRAM)
     
  • வாசிப்பு மட்டும் நினைவகம்
  • நிலையான நினைவகமாகிய வாசிப்பு மட்டும் நினைவகத்தில் உள்ள தரவுகளை மாற்றலை அல்லது அழித்தலை எளிதாகச் செய்ய முடியாது. 
  • கணினி உற்பத்தி நிறுவனத்தினால் தேவையான தரவுகள் அதில் நிலையாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
  • வாசிப்பு மட்டும் நினைவகத்தில் சில வகைகள் இருப்பதைக் காணலாம்.
  1. செய்நிரற்படுத்தத்தக்க வாசிப்பு மட்டும் நினைகம் (Programmable Read Only Memory) - (PROM)
  2. அழிபடு செய்நிரற்படுத்தத்தக்க வாசிப்பு மட்டும் நினைவகம் (Erasable Programmable Read Only Memory) - (EPROM)
  3. மின்னைப் பயன்படுத்தி அழிபடு செய்நிரற்படுத்தத்தக்க வாசிப்பு மட்டும் நினைவகம் (Electrically Erasable Programmable Read Only Memory) - (EEPROM)